விருதுநகர் அருகே மான் வேட்டை?: வனத்துறையினர் தீவிர விசாரணை
விருதுநகர் அழகாபுரி சாலையில் தனியார் பொறியியல் கல்லூரிக்கு எதிரே கருப்பம்பட்டி கண்மாய் பகுதி உள்ளது. இப்பகுதியில் அடர்த்தியான மரங்கள், சீனியாபுரம் கிராமத்தில் மானாவாரி நிலங்கள் மற்றும்


விருதுநகர் அருகே கண்மாய் பகுதியில் மான் வேட்டையாடப்பட்டதா என வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அழகாபுரி சாலையில் தனியார் பொறியியல் கல்லூரிக்கு எதிரே கருப்பம்பட்டி கண்மாய் பகுதி உள்ளது. இப்பகுதியில் அடர்த்தியான மரங்கள், சீனியாபுரம் கிராமத்தில் மானாவாரி நிலங்கள் மற்றும் அருகில் தண்ணீர் வசதி ஆகியவைகள் இருப்பதால் மான்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. இச்சாலையில் அடிக்கடி மான்கள் கடந்து காட்டுப் பகுதிக்குள் செல்வது வாடிக்கையாகும்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கண்மாய் பகுதிக்குள் கிராம மக்கள் இயற்கை உபாதைக்காக ஒதுங்கியுள்ளனர். அப்போது, யாரோ மானை வேட்டையாடி மறைத்து வைத்திருப்பதை பார்த்துள்ளனர். அதையடுத்து, அந்த வழியாக வந்த வருவாய்த்துறையைச் சேர்ந்த பாவாலி தலையாரி கருப்பையா, புல்லலக்கோட்டை தலையாரி பெரியண்ணன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களும் கண்மாய் பகுதிக்குள் இலைதலைகளால் மூடி வைக்கப்பட்டிருந்த மானை பார்த்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனக்கோட்ட அலுவலர் அசோக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வனத்துறை அலுவலர்கள் கண்மாய் பகுதிக்கு விரைந்து வந்து பார்த்துள்ளனர்.
அப்போது, 4 வயதுடைய ஆண் மான் என்றும் மூக்கில் படுகாயத்துடன் உயிரிழந்த நிலையில் இலைதலைகளால் மூடிவைத்துள்ளனர். பின்னர் இரவு நேரம் என்பதால் மானை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், உயிரிழந்த ஆண் மானின் கொம்புக்காகவோ அல்லது இறைச்சிக்காகவோ மர்ம நபர்கள் வேட்டையாடி கண்மாய் பகுதிக்குள் பதுக்கி வைத்திருக்கலாம் என்கிற கோணத்தில் அப்பகுதி மக்களிடம் தீவிரமாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...