தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே விபத்தில் பெண் பார்க்கச் சென்ற மாப்பிள்ளை உள்பட 2 பேர் சாவு

விருதுநகர் அருகே பெண் பார்க்கச் சென்ற போது 4 வழிச்சாலையில் தடுப்பு கம்பி மீது மினி வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே மாப்பிள்ளை உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 2

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:30 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பெண் பார்க்கச் சென்ற போது 4 வழிச்சாலையில் தடுப்பு கம்பி மீது மினி வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே மாப்பிள்ளை உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.

கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுதர்சன்(36). இவரது திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக மேட்டுப்பாளையத்திலிருந்து நாகர்கோவிலுக்கு மினி வாகனத்தில் அவரது உறவினர்கள் 5 பேருடன் செவ்வாய்கிழமை இரவு புறப்பட்டு சென்றனர். அப்போது இந்த வாகனத்தை அதே ஊரைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் ஓட்டினாராம். விருதுநகர் சூலக்கரை ஆயுதப்படை மைதானம் எதிரே இரவு 2 மணிக்கு சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 4 வழிச்சாலை இரும்பு தடுப்பு மீது மோதியது.

இந்த விபத்தில் மாப்பிள்ளை சுதர்சன், ஓட்டுநர் வேணுகோபால் ஆகியோர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். அவரது உறவினர்களான உமாராணி(45), ராமகிருஷ்ணன்(40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே தகவல் கிடைத்ததன் பேரில் சூலக்கரை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காயம் அடைந்தவர்களையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மாப்பிள்ளையின் சித்தப்பா சண்முகம் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.