தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே குடிநீர் குழாய்களை சீரமைக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

விருதுநகர் அருகே கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்களை சீரமைக்கவும், சுகாதார வளாகம் அமைத்து தருதல் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வலியுறுத்தி

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:29 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்களை சீரமைக்கவும், சுகாதார வளாகம் அமைத்து தருதல் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வலியுறுத்தி ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

இது குறித்து விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், வாடியூர் ஊராட்சியைச் சேர்ந்த கல்போது கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இக்கிராமத்தில் 500 குடியிருப்புகளில் 1600 பேர்களுக்கு மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இங்குள்ள தரைநிலத் தொட்டிக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் மோட்டார் பழுதாகி 6 மாதங்களுக்கு மேலாகிறது. இது தொடர்பாக ஊராட்சி அலுவலகத்திலும், தலைவரிடமும் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதேபோல், மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரும் குழாய்களிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், குறைந்தளவு நீரும் வீனாகும் நிலையேற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் கிராமத்தில் கடும் குடிதண்ணீர் ஏற்பட்டுள்ளது.

மேலும், தேவைப்படும் தண்ணீருக்காக 2 கி.மீ தூரம் நடந்து சென்று மோட்டார் பம்ப்செட் கிணற்றி்ல் எடுத்து வருகிறோம். இதையும் பொதுமக்கள் அதிகமாக வந்து நீரை எடுத்துச் செல்வதை பார்த்து விவசாயிகளும் தண்ணீரை நிறுத்தி விடுகின்றனர். இதேபோல் ஒவ்வொரு நாளும் தண்ணீர் எடுப்பதற்காகவே நேரம் சரியாகி விடுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பட்டாசு ஆலைகளுக்கும், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலைக்கும் செல்ல முடியாத ஏற்படுகிறது.

கிராமத்தில் குப்பைகள் மற்றும் கழிவு நீர் வாறுகால் ஆகியவைகளை ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் திருவிழாவின் போது மட்டும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வறுகால் பாலம் சேதமடைந்து உள்ளதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதை உடனே சீரமைக்க வேண்டும். மேலும், மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் தண்ணீர் தொட்டிகள் இல்லாததால், கூடுதலாக ஆழ்குழாய் கிணறு, பெண்கள் பயன்படுத்தும் வகையான சுகாதார வளாகம் ஆகியவைகளை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிம் அளித்த மனுவில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.