தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

முறைகேடு செய்த ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

விருதுநகர் மாவட்டம், மேட்டமலை ஊராட்சியைச் சேர்ந்த அம்பேத்கார் காலனியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு கூட்டமாக வந்தனர். அதையடுத்து, ஊராட்சி தலைவர் மீது

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:29 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தராமல் ஊராட்சி நிதியை கையாடல் செய்த தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

விருதுநகர் மாவட்டம், மேட்டமலை ஊராட்சியைச் சேர்ந்த அம்பேத்கார் காலனியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு கூட்டமாக வந்தனர். அதையடுத்து, ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீரென ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து பின் 4 பேரை மட்டும் ஆட்சியரிடம் மனுக் கொடுப்பதற்கு அனுமதித்தனர்.

மேட்டமலை ஊராட்சியைச் சேர்ந்த அம்பேத்கார் காலனி பொதுமக்கள் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் மேட்டமலை ஊராட்சியைச் சேர்ந்தது அம்பேத்கார் காலனி ஆகும். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இப்பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதார வளாகம் மற்றும் கழிவு நீர் வாறுகால் வசதிகளை நிதி ஒதுக்கீடு செய்தும் எதுவும் செய்து தரப்படவில்லை. இதனால், பொது இடங்களில் கழிவு நீர் செல்வதால் சுகாதாரக் கேடு ஏற்படும் நிலையிருக்கிறது.

இது தொடர்பாக ஊராட்சி தலைவரிடம் முறையிட்டால் எதுவும் செய்து தரமுடியாது என மறுக்கிறார். ஊராட்சியில் வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை கையாடல் செய்தும் வருகிறார். இதுவரையில் தாய் திட்டத்தில் மயானச் சாலை அமைத்தல், குடிநீர் தனிநபர்களுக்கு அமைத்து கொடுத்தல், தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தில் போலி அட்டைகளை பயன்படுத்துதல், பட்டாசு தொழிற்சாலைகளில் கூடுதல் பணம் பெற்றுக் கொண்டு குறைந்த அளவில் ரசீது வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். கிராம மக்கள் தவறுகளை தட்டிக் கேட்டால் கொலை மிரட்டலும் விடுத்தும் வருகிறார்.

பின்னர் காலனிப் பகுதியில் இரவு நேரங்களில் பெண்கள் இருக்கும் போது கதவு தட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அதோடு, என்னைப்பற்றி யார் புகார் செய்தாலும், அவர்களுக்கு துணைபோகிறவர்களையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகிறார். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அம்பேத்கார் காலனி பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.