மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ரயில் பிரேக்கில் பழுது: ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதி

திருச்சியில் இருந்து கரூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலைத்தான் கரூரில் உள்ள டெக்ஸ் நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பேருந்துக்கு கூண்டு கட்டுதல் போன்ற

Updated On :27 ஜூலை 2014, 10:33 am

கரூர் பயணிகள் ரயிலில் ஞாயிற்றுக்கிழமை திடீரென பிரேக்கில் பழுது ஏற்பட்டதைத் தொடர்ந்து கரூரில் இருந்து ரயில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

திருச்சியில் இருந்து கரூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலைத்தான் கரூரில் உள்ள டெக்ஸ் நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பேருந்துக்கு கூண்டு கட்டுதல் போன்ற தொழிóல்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் இரவு நேரத்தில் கரூர் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு பின்னர் அதிகாலை 6.50 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ரயிலை 6.50 மணிக்கு ஊழியர்கள் இயக்க முயன்ற போது, ரயில் இன்ஜினில் உள்ள வால்வு பழுதடைந்து பிரேக்கும் பழுதானது தெரிய வந்தது.

பழுதை நீக்க நேரமானதால், பயணிகள் ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாற்று இன்ஜின் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே இன்ஜினில் பழுது நீக்கப்பட்டதால் காலை 8.10 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாகச் சென்றதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.