அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

குடிநீர் பிடிப்பதில் தகராறு பெண் காவலர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் அருகே சூலக்கரையைச் சேர்ந்தவர் லட்சுமணன்(42). இவர் மதிமுக மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி ஞானமணி(40). இவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:58 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகாறில் கணவன்-மனைவியை தாக்கியதாக பெண் காவலர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு சூலக்கரை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் அருகே சூலக்கரையைச் சேர்ந்தவர் லட்சுமணன்(42). இவர் மதிமுக மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி ஞானமணி(40). இவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் மாரியம்மாள் என்பவருக்கும் ஏற்கனவே பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் தண்ணீர் பிடிக்கும் போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மாரியம்மாளும், அவரது மகள் தீபாமணியும்(சிவகாசி ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றுகிறார்) சேர்ந்து கம்பாலும், கையாலும் ஞானமணியையும், அதை தடுக்க வந்த அவரது கணவரான லட்சுமணனையும் தாக்கினார்களாம். இதில், ஞானமணி படுகாயம் அடைந்தாராம். இது தொடர்பாக லட்சுமணன் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சூலக்கரை போலீஸார் பெண் காவலர் தீபாமணி, அவரது தாயார் மாரியம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.