மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை விவசாயிகள் இழுத்து மூட முயன்றதால் பரபரப்பு

கரூர் மாவட்டத்தில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து விவசாயிகள் நடத்திய பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் மூலம்

Updated On :3 ஜூலை 2014, 9:57 am

கரூரில் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை வியாழக்கிழமை விவசாயிகள் இழுத்து மூட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டத்தில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து விவசாயிகள் நடத்திய பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் மூலம், நீதிமன்றம் ஆர்ஓ பிளாண்ட் அமைக்காத சாயப்பட்டறைகளை மூட உத்தரவிட்டதன் எதிரொலியாக மாவட்டத்தில் செயல்பட்ட 528 பட்டறைகளில் 468 பட்டறைகள் மூடப்பட்டன. மீதமுள்ள 60 பட்டறைகள் ஆர்ஓ பிளான்ட் அமைத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தின் முறையான அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன.

இந்த சாயப்பட்டறைகளில் இருந்தும், ஏற்கனவே அதிகாரிகளால் மூடப்பட்ட பட்டறைகளில் இருந்தும் இரவு நேரங்களில் சாயக்கழிவுகளை வாய்க்கால் மற்றும் ஆறுகளில் கலக்க விடுவதாக சமீபகாலமாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை கரூர் பழைய அமராவதி ஆற்று பாலத்தின் கீழ் உள்ள ராஜவாய்க்காலில் சாயக்கழிவு கலப்பதாக மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலச்சங்கத்தின் செயலாளர் ராமலிங்கத்துக்கு தகவல் கிடைத்ததின்பேரில் விவசாயிகள் சென்று பார்வையிட்டனர். மேலும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சேரலாதனுக்கும் தகவல் கொடுத்ததையடுத்து அவரும் சென்று பார்வையிட்டு, தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகள் சரியில்லாததால் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில், நாளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர். இதையடுத்து வியாழக்கிழமை காலை 10 மணியளவில் விவசாயிகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு வந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், கரூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் செட்ரிக்இமானுவேல் மற்றும் போலீஸார் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்குச் சென்று விவசாயிகள் மற்றும் மாசுக்கட்டுபாட்டு வாரிய பொறியாளர் சேரலாதன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் 5 நாட்களுக்குள் திருமாநிலையூர் பகுதியில் எந்த பட்டறைகளில் இருந்து சாயக்கழிவு வெளியேற்றப்படுகிறது என கண்டறியப்பட்டு உடனே நடவடிக்கை எடுக்கப்படும். பட்டறைகளில் ஏதாவது வெளியேற்றப்படுவது கண்டறியப்பட்டால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலச்சங்க செயலாளர் ராமலிங்கம் கூறுகையில், சாயக்கழிவு பிரச்னையில் கடந்த 10 ஆண்டுகளாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடு சரியில்லை. அந்த வாரியமே செத்துவிட்டது. இனி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை நாடமாட்டோம். இனி எங்கேயாவது சாயத்தண்ணீர் வெளியேற்றப்பட்டால், அந்த தண்ணீரை குடித்து சாகும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் சேரலாதன் கூறுகையில், விவசாயிகளின் புகாருக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொண்டுதான் வருகிறோம். இனி திருமாநிலையூர் பகுதியில் ஹோம்பிங் ஆபரேசன் மேற்கொள்ள உள்ளோம். இதில் சாயக்கழிவு வெளியேற்றுவது கண்டறியப்பட்டால், உடனே மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.