அமைச்சரின் உதவியாளர் எனக் கூறி மருத்துவரிடம் பணம் கேட்டவர் கைது
அவரிடம், எந்த அமைச்சரின் உதவியாளர் என கேட்டதற்கு, மிரட்டல் விடுத்தாராம். இதனை அடுத்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில், அமிர்தகடேஸ்வரர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு


அமைச்சரின் உதவியாளர் எனக் கூறி திண்டுக்கல் மருத்துவரிடம் ரூ.32ஆயிரம் பணம் கேட்ட சென்னையைச் சேர்ந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் புதுஅக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.எம்.அமிர்தகடேஸ்வரர். மருத்துவரான இவர் பழனி சாலையில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், தன்னை அமைச்சரின் உதவியாளர் என கூறியுள்ளார். பின்னர் அமைச்சரின் பெயரில் விளம்பரம் செய்வதற்கு ரூ.32ஆயிரம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். பணத்தை வங்கி கணக்கில் செலுத்திவிடுமாறும் கூறியுள்ளார்.
அவரிடம், எந்த அமைச்சரின் உதவியாளர் என கேட்டதற்கு, மிரட்டல் விடுத்தாராம். இதனை அடுத்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில், அமிர்தகடேஸ்வரர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது மீரான் மகன் முகமது ரபீ(44) என்பவரை கைது செய்தனர்.இவர் ஏற்கனவே திண்டுக்கல்லைச் சேர்ந்த மற்றொரு மருத்துவரிடம், மின்துறை அமைச்சரின் உதவியாளர் என கூறி ரூ.25ஆயிரம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...