காந்தி நினைவு தினம்: மதுரையில் நீதிபதிகள், முக்கியப் பிரமுகர்கள், மாணவர்கள் மலர்தூவி அஞ்சலி
மதுரையில் உள்ள காந்தி மியூசியத்தில் மகாத்மாவின் அஸ்தி பீடத்தில் பொதுமக்கள், நீதிபதிகள், முக்கியப் பிரமுகர்கள் மலர் தூவி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.


மதுரையில் உள்ள காந்தி மியூசியத்தில் மகாத்மாவின் அஸ்தி பீடத்தில் பொதுமக்கள், நீதிபதிகள், முக்கியப் பிரமுகர்கள் மலர் தூவி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தியாகிகள் மாயாண்டி பாரதி, பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், மற்றும் காந்தி மியூசிய செயலர் மா.பா.குருசாமி, காந்தி இலக்கியப் பண்ணை தலைவர் பாதமுத்து, சர்வோதய மாத இதழ் ஆசிரியர் நடராஜன், ஜப்பானிய புத்த பிக்கு இஸ்தானி உள்ளிட்டோர் இன்று காலை காந்தி அஸ்தி பீடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். மேலும், பள்ளிக் குழந்தைகளும் பொதுமக்களும் அதிகம் பேர் கூடி மலரஞ்சலி செலுத்தினர்.
காந்தி சுடப்பட்டு இறந்த நேரமான மாலை 5 மணிக்கு மதுரை காந்தி மியூஸியத்தில் மலரஞ்சலி நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...