திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆசிட் ஊற்றி மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஈஸ்வரன்கோயில் வீதியை சேர்ந்தவர் பாபு என்ற சம்சுதீன்(54). இவருக்கும் ஸ்ரீமுஷ்ணத்தை ரகமத்நிஷா(50) என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:12 am

பெ. விஜயபாஸ்கர்

ஆசிட் ஊற்றி மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஈஸ்வரன்கோயில் வீதியை சேர்ந்தவர் பாபு என்ற சம்சுதீன்(54). இவருக்கும் ஸ்ரீமுஷ்ணத்தை ரகமத்நிஷா(50) என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார். திருமணமாகி 2 ஆண்டுகளில் வெளிநாட்டு வேலைக்கு(டெய்லர்) சென்ற அவர், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு வருவாராம்.

மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட பாபு என்ற சம்சுதீன் ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிநாட்டுக்கு சென்ற அவர் அதே ஆண்டில் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி, மனைவி, மகனுக்கு தகவல் தெரிவிக்காமலேயே வெளிநாட்டிலிருந்து திடீரென சொந்த ஊருக்கு வந்துள்ளார்.  அன்று இரவு ரகமத் நிஷாவை அடித்து உதைத்த அவர், திடீரென உடலில் பல இடங்களில் ஆசிட்டை ஊற்றிவிட்டு தப்பியோடிவிட்டார்.சிதம்பரம், கடலூர் அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனிக்காத நிலையில் நவம்பர் மாதம் 7- ஆம் தேதி ரகமத் நிஷா உயிரிழந்தார்.

இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பாபு என்ற சம்சுதீனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.நீதிபதி எஸ்.சுபாதேவி, குற்றம்சாட்டப்பட்ட பாபு என்ற சம்சுதீனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.  அரசு தரப்பில் வழக்குரைஞர் பி.நந்தகுமார் ஆஜரானார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.