/

மதுரையில் பயரங்கவாதி கும்பலை சேர்ந்த ஒருவன் வெட்டி கொலை

மதுரையில் இன்று காலை மன்னர்மைதீன் 35 என்ற பயங்கரவாத கும்பலை சேர்ந்த ஒருவன் வெட்டி கொலை செய்யப்பட்டான்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:11 am

ஜெயப்பாண்டி

மதுரையில் இன்று காலை மன்னர்மைதீன் 35 என்ற பயங்கரவாத கும்பலை சேர்ந்த ஒருவன் வெட்டி கொலை செய்யப்பட்டான்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-  மதுரை நெல்பேட்டை கரீம்சா பள்ளிவாசல் 4வது தெருவை சேர்ந்த மன்னர் மைதீன் 35 மீது கடந்த 2005ம் ஆண்டு நடந்த பூசாரி கங்காதரன் கொலை  மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் கொலை ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு விடுதலையானார். இவனுக்கு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதே கொலை வழக்குகளில் தொடர்புடைய இப்ராஹிம் ஷா உள்ளிட்டோருக்கு தண்டனை கிடைத்தது. இதனால் மன்னர் மைதீன் இபராஹிம் ஷா ஆகியோரிடையே முன் விரோதம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த முன்விரோதத்தால் கடந்த 2012ம் ஆண்டு இம்ப்ராஹிம் ஷாவின் மருமகன் சதாம் உசேனை மன்னம் மைதீன் உள்ளிட்ட 4 பேர்  கடுமையாக தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை ஒப்லாபடித்துறை அருகே தனியார் பேப்பர் ஸ்டோரில் மன்னர் மைதீன் தன் நணபர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்த போது இரு சக்கரவாகனத்தில் வந்த 4 பேர் கும்பல் அவர்களை சுற்றி வளைத்து தாக்கி மன்னர்மைதீனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.

இதுதொடர்பாக விளக்குதூண் போலீசார் வழக்குப் பதிவு செய்து இப்ராஹிம் ஷா உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். கொலையுண்ட மன்னர் மைதீன் சடலம் பிரேசதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.