தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

நகைக்கடையை உடைத்து 7 கிலோ வெள்ளி திருட்டு

கரூர் நகர பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம். இவர் கரூர் ஜவஹர் பஜாரில் சந்தானம் என்ற பெயரில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வியாழக்கிழமை இரவு வழக்கம்போல வியாபாரம்

Updated On :17 ஜனவரி 2014, 10:51 am

கரூரில் வியாழக்கிழமை இரவு நகைக்கடையை உடைத்து 7 கிலோ வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கரூர் நகர பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம். இவர் கரூர் ஜவஹர் பஜாரில் சந்தானம் என்ற பெயரில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வியாழக்கிழமை இரவு வழக்கம்போல வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டுச் சென்றார். பின்னர் வெள்ளிக்கிழமை காலை கடையை திறந்து உள்ளே சென்ற போது, கடையின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கடையினுள் பார்த்த போது அங்கிருந்த சுமார் 7 கிலோ எடையுள்ள வெள்ளி நகைகள் மற்றும் பொருட்கள் திருட்டுப்போனது தெரியவந்தது. இதையடுத்து கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

சம்பவம் நடந்த கடையை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜோஷிநிர்மல்குமார் நேரில் வந்து பார்வையிட்டார். மேலும் தடவியல் நிபுணர்களும் கடையினுள் திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள கடையில் திருட்டுப்போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.