/

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆஜர்

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்குவித்த வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மதுரை நீதிமன்ற்த்தில் வியாழக்கிழமை

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:10 am

ஜெயப்பாண்டி

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்குவித்த வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மதுரை நீதிமன்ற்த்தில் வியாழக்கிழமை ஆஜரானார்.

  கடந்த திமுக ஆட்சியிர் அமைச்சராக இருந்தவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். இவர் மீது வருவாய்க்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகப் புகார் எழுந்தது. அதனடிப்படையில்,  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலெட்சுமி, தொழிலதிபர் சண்முகமூர்த்தி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குத் தொடர்ந்தனர்.

 வழக்கின் விசாரணை மதுரை நீதிமன்ற வளாகத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. விசாரணைக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழிலதிபர் சண்முகமூர்த்தி ஆகியோர் ஆஜராகினர். விசாரணையை வரும் பிப்ரவரி 6-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி கருணாநிதி உத்தரவிóட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.