/

அத்வானி ரதயாத்திரை பாதையில் குண்டு: நீதிமன்ற விசாரணையில் 4 பேர் நேரில் ஆஜர்

பாஜக தலைவர் எல்.கே.அத்வானி ரதயாத்திரை செல்லும் வழியில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தென்காசி ஹனிபா உள்ளிட்ட 4 பேர் மதுரை

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:10 am

ஜெயப்பாண்டி

பாஜக தலைவர் எல்.கே.அத்வானி ரதயாத்திரை செல்லும் வழியில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தென்காசி ஹனிபா உள்ளிட்ட 4 பேர் மதுரை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகினர்.

   கடந்த 2011-ல் பாஜக தலைவர் எல்.கே.அத்வானி மதுரையிலிருந்து ராஜபாளையம் பகுதிக்கு ரதயாத்திரை செல்லத் திட்டமிட்டிருந்தார். இந்தநிலையில் அவர் செல்லும் பாதையான திருமங்கலம் ஆலம்பட்டி தரைப்பாலத்தில் பைப் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, மீட்கப்பட்டன.

  பைப் வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட வழக்கில் தென்காசி ஹனிபா, அப்துல்லா, இஸ்மத், ஹக்கீம் மற்றும் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக் ஆகியோர் சம்பந்தப்பட்டது தெரியவந்தது. அவர்கள் சமீபத்தில்தான் இந்த வழக்கில் முறைப்படி கைது செய்யப்ப்டடனர். இந்தநிலையில் வழக்கின் விசாரணைக்கு பிலால்மாலிக், போலீஸ் பக்ருதீன் தவிர மற்ற 4 பேரும் வியாழக்கிழமை மதுரை 4-வது நீதித்துறை நடுவர்நீதிமன்றத்தில் ஆஜராயினர். விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட் கோவிந்தராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.