தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகர் அருகே பாண்டியன் கிராம வங்கியில் கொள்ளை முயற்சி: லட்சக்கணக்கான பணம் நகைகள் தப்பியது

விருதுநகர் அருகே பாண்டியன் கிராம வங்கியின் கேட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பண இருப்பு பெட்டியை உடைக்க முடியாததால் நகை மற்றும் லட்சக்கணக்கான பணம்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:09 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பாண்டியன் கிராம வங்கியின் கேட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பண இருப்பு பெட்டியை உடைக்க முடியாததால் நகை மற்றும் லட்சக்கணக்கான பணம் ஆகியவை அதிஷ்டவசமாக தப்பியது.

விருதுநகர் அருகே உள்ளது சங்கரலிங்காபுரம் கிராமம். இங்கு பாண்டியன் கிராம வங்கியின் கிளை தனியார் வளாகத்தில் இயங்கி வருகிறது. இதில், பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கணக்கு வைத்து பணத்தை சேமித்து வைத்துள்ளனர். இங்கு வழக்கம் போல் கடந்த சனிக்கிழமை வங்கியின் வேலை நேரம் முடிந்ததும் பணியாளர்கள் பூட்டி விட்டுச் சென்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் வழக்கம் போல் பணிக்கு திரும்பியுள்ளனர். அப்போது, வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதையடுத்து, உள்ளே நுழைந்து பார்த்ததில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வங்கி கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதோடு, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திவிட்டு பணம் இருக்கும் லாக்கரை உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், உடைக்க முடியாத காரணத்தாலும், அதிகாலை நேரம் போக்குவரத்து தொடங்கியிருந்த நேரம் என்பதாலும் மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

இது தொடர்பாக வங்கியின் மேலாளர் சோமசுந்தரம் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் செய்தார். அதன் பேரில் கைரேகை நிபுணர்கள் வரழைக்கப்பட்டு அங்கு பதிந்துள்ள ரேகைகளை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள்,  விவசாயிகளின் நகைகள் மற்றும் சேமிப்பு என லட்சக்கணக்கான பணம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.