பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில் விழாக்கால சலுகை திட்டம் அறிமுகம்
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விழாக்கால சலுகையாக 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் ரூ.6 ஆயிரத்திற்கு டாப்-அப் செய்தால் ரூ.7200 மதிப்பு வரையில் சந்தாதாரர்கள்(டாக் வேல்யு) பேசலாம்.


பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சார்பில் சந்தாதாரர்கள் பயனடையும் வகையில் பல்வேறு வகையான விழாக்கால சலுகை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பொதுமேலாளர்(பொறுப்பு)ராஜம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விழாக்கால சலுகையாக 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் ரூ.6 ஆயிரத்திற்கு டாப்-அப் செய்தால் ரூ.7200 மதிப்பு வரையில் சந்தாதாரர்கள்(டாக் வேல்யு) பேசலாம்.அதேபோல், டாப்-அப் ரூ.200 முதல் ரூ.990 வரையில் முழு டாக் வேல்யு மற்றும் டாப்-அப் ரூ.1000 முதல் 2990 வரை 10 சதவீதம் கூடுதலாகவும் டாக் வேல்யும் இம்மாதம் 31-ம் தேதி வரையில் வழங்கப்படுகிறது. அதையடுத்து, விழாக்கால சலுகையாக கூடுதல் மதிப்புடைய காம்போ ரூ.222 மற்றும் ரூ.555-ஐ அறிமுகம் செய்துள்ளது. மேலும், குறுகிய கால சலுகையாக விலையில்லா சிம்கார்டுகளும் வழங்கப்படுகிறது.
இது குறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சேவைகள் மற்றும் கட்டணத்திட்டம் பற்றிய முழு விவரங்களை www.tamilnadu.bsnl.co.in என்ற இணைய தள முகவரியை பார்த்து அறிந்து கொள்ளலாம். எனவே விழாக்கால சலுகையை சந்தாதாரர்கள் அனைவரும் வாங்கி பயனடை வேண்டும் என விருதுநகர் மாவட்ட பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பொதுமேலாளர்(பொறுப்பு) ராஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...