தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தைப்பொங்கலுக்கான வெல்லம் தயாரிக்கும் பணிகள் மும்முரம்: விலை வீழ்ச்சியால் கவலையடைந்துள்ள விவசாயிகள்

விருதுநகர் மாவட்டப் பகுதிகளில் கரும்பிலிருந்து சாறுபிழிந்து தைப்பொங்கலுக்கான வெல்லம் தயாரிப்பு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புோதுமான விலை

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:08 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டப் பகுதிகளில் கரும்பிலிருந்து சாறுபிழிந்து தைப்பொங்கலுக்கான வெல்லம் தயாரிப்பு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புோதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டப் பகுதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர், நடையனேரி உள்ளிட்ட மேற்கு மலைத்தொடர்ச்சி அடிவாரப் பகுதியில் ஆலைக் கரும்பு பயிரிடுவது வழக்கம். அதேபோல், நிகழாண்டிலும் 5 ஆயிரம் ஹெக்டேரில் கரும்பு பயிரிட்டுள்ளனர். தற்போது, சர்க்கரை ஆலையில் கரும்புக்கு போதிய விலை கிடைக்காத நிலையிருக்கிறது. அதனால் கரும்பை ஆலைகளுக்கு அனுப்பாமல், வேலையாள்கள் மூலம் அரைத்து வெல்லம் தயாரித்து கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே கண்மாய் பாசனத்தையும், கிணற்றுப்பாசனத்தையும் நம்பி கரும்பு பயிரிட்டிருந்தனர். ஆனால்,போதுமான மழையில்லாததால் கரும்பு சாகுபடி விவசாயிகள் எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் இல்லை. அதனால் விலையும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காத நிலையிருக்கிறது. இப்பயிர் 10 மாதத்தில் அறுவடை செய்யப்படும், நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 7,8 மாதங்களிலேயே அறுவடை செய்யப்படுகிறது.

ஒரு ஏக்கரில் பயிர் சாகுபடி செய்வதற்கு பாத்தி கட்டுதல், நடவு, உரம் மற்றும் பராமரிப்பு செலவு என ரூ.30 ஆயிரம் வரையில் செலவு ஆகும். அதேபோல், கரும்பு வெல்லம் காய்ச்சி உற்பத்தி செய்வதற்கும், பணியாளர்களை பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் கரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அழைத்து வருவதற்கும் ரூ.30 ஆயிரம் வரையில் செலவாகும். இதனால் வெல்லம் தயாரிப்பதற்கான செலவும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் கடந்தாண்டை விட நிகழாண்டில் விலையும் குறைந்துள்ளதாக வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

இது குறித்து விருதுநகர் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் ராமசாமிராஜா கூறுகையில், கரும்பு வெட்டு மற்றும் கரும்பு சாறு அரவைக்கு ரூ.80 கூலியாகவும், அதை காய்ச்சுவதற்கு கூலியாக ரூ.150 முதல் ரூ.180 வரையில் வழங்கப்படுகிறது. இப்பணியில் குறைந்தது 6 முதல் 8 பேர் வரையில் ஈடுபடுவார்கள். ஒரு நாளுக்கு 7 உலைகள் என்ற நிலையில், ஒரு உலைக்கு தலா 80 கிலோ வெல்லம் என்ற நிலையில் 5 குவின்டால் முதல் 6 குவின்டால் வரையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த ஆயுதபூஜை, தீபாவளி திருநாளின் போது ஒரு குவின்டால் ரூ.4200-க்கு விற்பனையானது. தற்போது, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதி வியாபாரிகள் ரூ.3500 முதல் ரூ.3400 வரையில் வாங்குகின்றனர். பொங்கல் விழா நெருங்கி வர இருப்பதால் விலை குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே விவசாயிகள் நஷ்டமடைவதை காக்கும் வகையில் கூட்டுறவு நியாய விலைக்கடையின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என ராமசாமிராஜா கோரிக்கையும் விடுத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.