பள்ளிகளில் 3 ஆம் பருவ பாடப் புத்தகம் விநியோகம்
அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு 3 ஆம் பருவத்திற்குரிய


அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு 3 ஆம் பருவத்திற்குரிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த 2012-2013ஆம் கல்வி ஆண்டு முப்பருவ (செமஸ்டர்) முறையை அறிமுகப்படுத்தியதோடு, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாடப் புத்தகம் இலவசமாக வழங்கி வருகிறது.
முப்பருவ முறை இந்தக் கல்வி ஆண்டு முதல் 9ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான முதல் பருவ புத்தகங்கள் ஜூன் மாதம் 10ஆம் தேதியும், இரண்டாம் பருவ புத்தகங்கள் அக்டோபர் 3ஆம் தேதியும் வழங்கப்பட்டன.
மூன்றாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்களை அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளி திறக்கும்போது(ஜன.2) வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான பாடப் புத்தகங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கல்வி அலுவலகங்களிலிருந்து கடந்த மாத இறுதி வாரத்தில், கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 3 லட்சத்து 72 ஆயிரத்து 549 மாணவ, மாணவிகளுக்கு தேவையான மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டது.
இதனையடுத்து வியாழக்கிழமை காலை பள்ளிகள் திறக்கப்பட்டவுடன், மாணவர்களுக்கு 3 ஆம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...