தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகர் பகுதி திருக்கோயில்களில் புதுவருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை

விருதுநகரில் சிவகாசி சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீசொக்கநாதர் திருக்கோயில், பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள வாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், வெயிலுகந்தம்மன் திருக்கோயில், பராசக்தி

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:06 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட பகுதிகளில் உள்ள ஆங்கில புதுவருட பிறப்பை முன்னிட்டு திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.

விருதுநகரில் சிவகாசி சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீசொக்கநாதர் திருக்கோயில், பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள வாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், வெயிலுகந்தம்மன் திருக்கோயில், பராசக்தி மாரியம்மான் திருக்கோயில், ரயில்வே காலனி மாரியம்மன் திருக்கோயில், என்.ஜி.ஓ. விநாயகர் திருக்கோயில், ரயில்வே பீடர் சாலையில் உள்ள ராமர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் புத்தாாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதிகாலையிலேயே எழுந்து புத்தாடைகள் அணிந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், இப்பகுதியில் உள்ள செங்குன்றாபுரம் மாரியம்மன் திருக்கோயில்,  நடையனேரி விநாயகர் கோயில், வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை மாவூற்று மற்றும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில், அருப்புக்கோட்டை மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.