தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகர் அருகே ரேசன் கடையில் தீவிபத்து 53 மூடை அரிசி நாசம்

விருதுநகர் அருகே பாண்டியன் நகரில் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் சார்பில்  ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு புதுவருட பிறப்பு கொண்ட்டாடத்துக்காக

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:06 am

எஸ். பாண்டியன்

புத்தாண்டு கொண்ட்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்து சிதறி ரேசன் கடையில் விழுந்ததால் சாக்குபைகள் மற்றும் 53 அரிசி மூட்டைகள் ஆகியவை கருகி சேதம் அடைந்தன.

விருதுநகர் அருகே பாண்டியன் நகரில் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் சார்பில்  ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு புதுவருட பிறப்பு கொண்ட்டாடத்துக்காக இரவு 11.30 மணிக்கு மேல் இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்துள்ளனர். அப்போது, அதிலிருந்து சிதறிய தீ ரேசன் கடை வாரந்தாவில்  வைத்திருந்த சாக்கு கட்டுகளில் விழுந்ததை அடுத்து தீ மளமளவென அரிசி மூட்டைகளுக்கு பரவியது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதற்கு முன்பாக முன்புற கேட்டை திறந்து தீயை அணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் உள்ளே பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்த 50 கிலோ கொண்ட 53 மூட்டை அரிசி தீயில் கருகி நாசமானது. இது தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.