தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ராமர் திருக்கோயில் வளாகத்தில் ஸ்ரீவெங்கடஜலபதி-ஸ்ரீபத்மாவதி சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை

இக்கோயில் வளாகத்தில் அருள்மிகு ஸ்ரீவெங்கடாஜலபதி திருக்கோயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அருள்மிகு ஸ்ரீவெங்கடாஜலபதி சுவாமி சிலையும்-அருள்மிகு ஸ்ரீபத்மாவதி தாயார் சிலையும்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:06 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் ஸ்ரீராமர் திருக்கோயில் வளாகத்தில் ஸ்ரீவெங்கடாஜலபதி-ஸ்ரீபத்மாவதி தாயார் சிலையும் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் வளாகத்தில் அருள்மிகு ஸ்ரீவெங்கடாஜலபதி திருக்கோயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அருள்மிகு ஸ்ரீவெங்கடாஜலபதி சுவாமி சிலையும்-அருள்மிகு ஸ்ரீபத்மாவதி தாயார் சிலையும் திருப்பதியில் இருந்து பிற்பகலில் விருதுநகருக்கு கொண்டு வந்தனர். அப்போது, ஸ்ரீவெங்கடாஜலபதி பக்த குழுவினர் திரளாக மேளதாளத்துடனும், கோலாட்டம் ஆடியும் சென்று கச்சேரி சாலையில் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக மதுரை சாலையில் வந்து ராமமூர்த்தி சாலை உள்ளிட்ட  தெருக்கள் வழியாக ராமர் கோயில் வளாகத்தை வந்தடைந்தது.

அதையடுத்து இக்கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும்  பக்தர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவெங்கடஜலாபதி பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.