/

மதுரையில் நகை வியாபாரியை வெட்டி 2.5 கிலோ தங்கம் கொள்ளை

மதுரையில், நகை வியாபாரியை வெட்டிவிட்டு, அவரிடம் இருந்து 2.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:29 am

ஜெயப்பாண்டி

மதுரையில், நகை வியாபாரியை வெட்டிவிட்டு, அவரிடம் இருந்து 2.600 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு 53 லட்சம் ரூபாய் என்று குறப்படுகிறது.

மதுரையைச் சேர்ந்த நகை வியாபாரி தட்சிணாமூர்த்தி. மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே தெப்பக்குளம் பகுதியை ஒட்டி அவர் நகைக்கடை வைத்துள்ளார். இவர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் நகை ஆர்டர் செய்து விநியோகம் செய்து வருவாராம்.

அவர் இன்று காலை அறந்தாங்கிக்கு தங்க நகைகளை எடுத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுரை சிஎம்ஆர் சாலையில் தட்சிணாமூர்த்தியை கத்தியால் வெட்டி தாக்கிவிட்டு, 4 பேர் கொண்ட கும்பல், அவரிடம் இருந்து 2.6 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றது.

கொள்ளையர்கள் வெட்டியதில் படுகாயமடைந்த தட்சிணாமூர்த்தி, உடனடியாக மதுரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தெப்பக்குளம் காவல்துறையினர், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.