மதுரையில் புதிய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டடத்துக்கு இன்று பூமி பூஜை
மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது இந்த புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை இன்று நடந்தது.


மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது இந்த புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை இன்று நடந்தது.
மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தற்போது மீனாட்மி அம்மன் கோவில் தெற்கு கோபுர வாசல் அருகே செயல்பட்டு வருகிறது. மன்னர் காலத்து கட்டடம் ஆன இதில் போதிய இட வசதி இல்லை,
எனவே அழகர் கோயில் சாலையில் தற்போதைய போலீஸ் கமிஷனர் தங்கும் வீட்டுக்கு எதிரே லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கும் தேசிய நெடுஞாலை பொறியாள அலுவலகத்துகும் இடைபட்ட பகுதியில் இடம்தேர்வு செய்யப்பட்டது.
அதன் படி 38 ஆயிரத்து 750 சதுரடியில் 7 .1 கோடி செலவில் புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை இன்று நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் தஞ்சை மாத்தூர் துணைகமிஷனர்கள் சமத்ரோகன் ராஜேந்திரா, ராஜராஜன் ஆகியோர் கலந்துகொண்ட்னர்.
தரைத்தளம் மற்றும் 5 மேல் மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் அனைத்து நவீன வசதிகளும் இடம்பெறும் என்றும் பொதுமக்களுக்கான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட மாநகர் காவல் துறையின் அனைத்து பிரிவுகளும் இதில் இடம் பெறும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
16 மாதங்களில் இந்த கட்டப்பணியை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தமிழ் நாடு காவலர் வீட்டு வசதிவாரிய பொறியாளர்கள் கூறினர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...