திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மகளுக்கு பள்ளி கட்டணம் கட்டாத ஏக்கத்தில் தாய் தீக்குளிப்பு

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(30). இவரது மனைவி கீர்த்தனா(26). இருவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:26 am

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் மஞ்சக்குப்பத்தில் மகளுக்கு பள்ளி கட்டணம் கட்ட முடியாத ஏக்கத்தில் தாய் தீக்குளித்தார்.

  கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(30). இவரது மனைவி கீர்த்தனா(26). இருவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

 பாலமுருகன் மருந்து விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். ஆனால் இந்த பணி முழுமையாக அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவ்வப்போது வேலை இல்லாமல் வீட்டில் இருந்தார். வீட்டில் வறுமை ஏற்பட்டுள்ளது.

 மேலும் மகளுக்கான பள்ளி கட்டணம் கட்டவும் முடியாமல் போனது. மனமுடைந்து காணப்பட்ட கீர்த்தனா திங்கள்கிழமை மாலை உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்துள்ளார். காப்பாற்ற சென்ற பாலமுருகன் தீக்காயமடைந்தனர். பலத்த தீக்காயம் அடைந்த இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இதுகுறித்து புதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.