/

தனியார் அங்காடியில் வெடிபொருள் கண்டுபிடிப்பு: மதுரையில் பரபரப்பு

மதுரை அருகில் உள்ள உத்தங்குடியில் இருந்து ஒத்தக்கடை செல்லும் வழியில் ரிலையன்ஸ் காய்கறி மார்ட்டில் வெடிகுண்டு போன்ற மர்மப் பொருள் பையில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸார்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:22 am

ஜெயப்பாண்டி

மதுரை அருகில் உள்ள உத்தங்குடியில் இருந்து ஒத்தக்கடை செல்லும் வழியில் ரிலையன்ஸ் காய்கறி மார்ட்டில் வெடிகுண்டு போன்ற மர்மப் பொருள் பையில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கே சோதனை நடத்திய போலீஸார் மர்மப் பொருளைக் கைப்பற்றி வெடிகுண்டு நிபுணர்களின் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்த போலீஸார், இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சோதனைக்குப் பின்னரே அது எத்தகைய வெடிபொருள் என்று  தெரியவரும் என்றனர். இது மதுரை மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.