திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அதிமுகவின் அதிரடி வியூகம்: பாமகவை எதிர்கொள்ள களம் இறங்கும் தவாக

மக்களவை தேர்தலில் வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாய வாக்கு வங்கியை குறிவைத்து பாமக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையிலும் 10 மக்களவை

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:22 am

பெ. விஜயபாஸ்கர்

பாமக பிரசாரத்தை எதிர்கொள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியை களம் இறக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மக்களவை தேர்தலில் வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாய வாக்கு வங்கியை குறிவைத்து பாமக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையிலும் 10 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே தேர்தல் பிரசாரத்தை அக்கட்சி தொடங்கிவிட்டது.

6 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்துகொண்ட, பாமக நிறுவனர் ராமதாஸ், தனது உடல் நிலை குறித்து கவலைப்படாமல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட தொகுதிகள்தோறும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார். இப்போது சட்டமன்ற தொகுதி வாரியாக மகளிர் மாநாட்டை நடத்தி, வன்னியர் சமுதாய வாக்குகளை பாமகவுக்கு கொண்டுசேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த பிரசார யுக்தி மூலம் வன்னியர் சமுதாய வாக்குகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாமக முந்திக்கொண்டுள்ளது என்று கூறுவதை மறுக்க முடியாது. வட மாவட்டங்களை பொறுத்தவரை வேட்பாளரின் வெற்றிக்கு வன்னியர் சமுதாய வாக்குகள் மிகவும் முக்கியம்.பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுக, திமுக கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் தான் சிறையில் அடைக்கப்பட்டதையும், கட்சியினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், அதனால் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் கூறி வருகிறார்.

இந்த பிரசாரத்தை முறியடிக்க வலுவான மாற்று பிரசாரம் அதிமுக கருதுவதாக கூறப்படுகிறது. இந்த அடிப்படையில் தான்,  தமிழக வாழ்வுரிமை கட்சியை கூட்டணியில் இணைத்துக்கொள்ள அதிமுக திட்டமிட்டுள்ளது. இந்த அடிப்படையில் தான் அதிமுகவின் தேர்தல் குழுவில் உள்ள 4 அமைச்சர்களும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனிடம் கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த பேச்சுவார்த்தைக்கு முன்பே திமுக தரப்பில் வேல்முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் அக்கட்சி மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க கூடும் என்பதால், முடிவை சொல்லாமல் இருந்தார்.

ஆனால் அதிமுக கூட்டணிக்கு அழைத்த 4 அமைச்சர்களும், ஈழத்தமிழர்களுக்காக முதல்வர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது. ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறை கொண்ட தவாக, அதிமுகவுடன் இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று கூறியதை வேல்முருகன் ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவி்தார். முறையான கூட்டணி அறிவிப்பு வரும் 23 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் தவாக மாநில மாநாட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25 ஆண்டுகளுக்கும் மேல் பாமகவில் இருந்த வேல்முருகன், 2001 முதல் 2011 வரை இரண்டு முறை பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். 2011-ல் நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதன்பிறகு தலைமையை விமர்சித்த வேல்முருகன், கடந்த 3-11-2011-ல் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதன்பிறகு தமிழக வாழ்வுரிமை கட்சியை தொடங்கினார். பாமகவுக்கு வாக்குப வங்கி உள்ள தொகுதிகளாக கருதப்படும் கடலூர், சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆரணி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வடமாவட்டங்களில் உள்ள மக்களவை தொகுதிகளில் கவனத்தை செலுத்தி பாமகவுக்கு எதிராக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் தான் அதிமுகக்கு எதிரான ராமதாஸ் பிரசாரத்தை எதிர்கொள்ள, அந்த கட்சியில் 25 ஆண்டுகளாக முக்கியப் பொறுப்பில் இருந்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவரை எதிர்த்து நிற்கும் வேல்முருகனை களம் இறக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.       கொங்கு மண்டலத்தில் கொங்கு கவுண்டர் சமுதாயத்தில் ஓரளவு வாக்குவங்கியை பெற்றிருந்த கொங்கு நாடு முன்னேற்றக்கழகம் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது.  அப்போது அந்த கட்சிக்கு பதிலடி கொடுக்க தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவையை அதிமுக கூட்டணியில் முதல்வர் சேர்த்துக்கொண்டார்.

அதேபோன்றுதான் இந்த தேர்தலில் வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாயத்தில் நிலையான வாக்கு வங்கியை பெற்றுள்ள பாமகவை எதிர்கொள்ள, வேல்முருகனை களமிறக்க முதல்வர் இந்த அதிரடி வியூகத்தை வகுத்துள்ளதாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.