திருப்புவனம் இளைஞர் கொலையில் மதுரை இன்ஸ்பெக்டர் கைது
சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவர், கடந்த ஜன.29ம் தேதி மதுரை அருகே பொட்டப்பாளையம் பகுதியில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலைக் கைப்பற்றிய


சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவர், கடந்த ஜன.29ம் தேதி மதுரை அருகே பொட்டப்பாளையம் பகுதியில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அவர் அடித்துக் கொல்லப்பட்டதாக தெரியவந்தது. இதுகுறித்து திருப்புவனம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், ஜன. 28ம் தேதி இரவு யாகப்பா நகரிலுள்ள இன்ஸ்பெக்டர் பாலுச்சாமி என்பவர் வீட்டுக்கு கணேசமூர்த்தி சென்றது தெரியவந்தது. இந்த விசாரணையில், பாலுச்சாமி வீட்டுக்குச் சென்றபோது அங்கு ஏற்பட்ட தகராறில் கணேச மூர்த்தி அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இன்ஸ்பெக்டர் பாலுச்சாமி மதுரை மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறையில் வயர்லெஸ் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். பாலுச்சாமியின் மகளுடன் கணேசமூர்த்தி நெருங்கிப் பழகியதாகவும் அதன் அடிபப்டையில் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது. இதை அடுத்து பாலுச்சாமி, அவரது மனைவி சபரீஸ்வரி மற்றும் சத்யா, பிரபு, தெய்வேந்திரன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருவதாக திருபுவனம் போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...