திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வரதட்சணை கொடுமை வழக்கில் கைது: இடைநிலை ஆசிரியர் பணி இடைநீக்கம்

வரதட்சணை கொடுமை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த இடைநிலை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து கடலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் குணசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:20 am

பெ. விஜயபாஸ்கர்

வரதட்சணை கொடுமை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த இடைநிலை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து கடலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் குணசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியம், ஒரங்கூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுபவர் எஸ்.இசக்கிராஜா.  திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவருக்கும் ராமநாதபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த சந்தியாவுக்கும்(22) திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, சந்தியாவின் பெற்றோர் வரதட்சணையாக 35 பவுன் நகை, ரூ.3.5 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் கூடுதல் வரதட்சணை கேட்டு சந்தியாவை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. தினமும் பள்ளிக்கு செல்லும் போது சந்தியாவை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு செல்வாராம்.கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்காக ராமநாதபுரத்துக்கு சென்றிருந்த சந்தியா, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக இசக்கிராஜா மீது இன்ஸ்பெக்டர் மீனாம்பாள் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் 12-ஆம் தேதி அவரை கைது செய்தார். பின்னர் 22ஆம் தேதி அவர் ஜாமீனில் விடுதலையானதாக தெரிகிறது. இந்த நிலையில் ஆசிரியர் இசக்கிராஜாவை பணி இடைநீக்கம் செய்து கடலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி குணசேகரன் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.