/

வேகப்பந்து பயிற்சி மையம் துவங்க உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பேட்டி

மதுரை வந்திருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:19 am

ஜெயப்பாண்டி

மதுரை வந்திருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கனரா வங்கி சார்பில் மதுரை அப்பலோ மருத்துவமனையில் நடந்த உடல் நல காப்பீட்டு திட்டம் குறித்த இலவசமுகாமை முகமாமை பெங்களூர் கனராவங்கியின் உதவி மேலாளரும் இந்திய முன்னாள் கிரிக்கெட்  அண்யின் வேகப்பந்து வீச்சாளரும் துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பெங்களூரில் வேகப்பந்து பயிற்சி மையம் துவங்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது

முந்தய காலத்தை ஒப்பிடும் போது கிரிகெட் விளையாட்டு மிகவும் மாறிவருகிறது.  குறைந்த பந்துகளில் பேட்ஸ் மேன்கள் அதிக ரன்களை எடுத்து வருகின்றனர். ஆகவே பந்து வீச்சாளர்களும் தங்கள் திறனை மாற்ற வேண்டியுள்ளது. திட்டமிட்டு பந்து வீசுவதன் மூலமே திறனை வெளிப்படுத்த முடியும். பந்துவீச்சு பக்கததை அடிக்கடி மாற்றுவதன் மூலம் நேர்த்தியான பீல்டிங் இருக்காது. இதனால் கேப்டனுக்கு தர்ம சங்கடம் ஏற்படும் ஆகவே திட்டமிட்டு விளையாட்டின் போக்கை தீர்மானிக்கும் வகையில் பந்து வீசுவது அவசியம்.

1990களில் இந்திய அணி தனிப்பட்ட நபர்களை நம்பி இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சாம்பியன் பட்டத்தை வென்றது குழு ஒற்றுமையை வைத்துதான். அணியில் குழு மனப்பான்மையை ஏற்படுத்துவதும் வீரர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பது மிகவும் முக்கியமானதாகும். அதுவே வெற்றிக்கு வழிவகுக்கும். தற்போது இந்திய அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர்.

ரஞ்சி, ஐபிஎல் போன்ற போட்டிகள்  மூலம் புதிய திறமையான வீரர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். எனினும் வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கும் வகையில் கர்நாடகவில் வேகப்பந்து பயிற்சி மையத்தை தொடங்க உள்ளேன் எனறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.