திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 10ஆம் தேதி வேலைநிறுத்த நோட்டீஸ்

என்எல்சியில் பணிபுரியும் 13,000 ஒப்பந்த தொழிலாளர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10ஆம் தேதி வேலைநிறுத்த

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:19 am

பெ. விஜயபாஸ்கர்

என்எல்சியில் பணிபுரியும் 13,000 ஒப்பந்த தொழிலாளர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10ஆம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்க உள்ளனர். 

 என்எல்சி ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் 17வது வட்ட அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க அலுவலகத்தில் நெய்வேலியில் அண்மையில் நடைபெற்றது. ஐஎன்டியுசி ஒப்பந்த சங்க சிறப்பு தலைவர் சுகுமார் தலைமை வகித்தார்.

 ஒப்பந்த தொமுச, ஐஎன்டியுசி, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், சிஐடியு, பாட்டாளி தொழிற்சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி, இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்ததாரர் சங்கம், ஏஐடியுசி, பிஎம்எஸ், தமிழக வாழ்வுரிமை தொழிற்சங்கம் ஆகியவைகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

 கூட்டத்தில் வரும் 10 ஆம் தேதி என்எல்சி நிர்வாகத்திடம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி 6ஆம் தேதி கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்வதெனவும், ஆர்ப்பாட்டம் குறித்து 5ஆம் தேதி சிஐடியு அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்துவது எனவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.