பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

விருதுநகரில் நின்றிருந்த சுற்றுலா பயணியின் காரில் வைத்திருந்த 10 ஆயிரம் மாயம்

விருதுநகரில் தங்கும் விடுதிக்கு முன்பு நிறுத்தியிருந்த சுற்றுலா பயணியின் காரில் மேல் பகுதியில் சூட்கேஸில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மாயமான சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிரமாக

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:47 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் தங்கும் விடுதிக்கு முன்பு நிறுத்தியிருந்த சுற்றுலா பயணியின் காரில் மேல் பகுதியில் சூட்கேஸில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மாயமான சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

கர்நாடகம், காவேரி மாவட்டத்தைச் சேர்ந்த சேசாகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தப்பா சீகல்மணி(47). இவர் உறவினர்களுடன் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு வழிபாட்டு தலங்களுக்கு தனது வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனர். இதற்கிடையே விருதுநகர் கச்சேரி சாலையில் வாகனத்தை நிறுத்தி விட்டு தங்கும் விடுதியில் அறை வாடகைக்கு எடுப்பதற்காக சென்றார்களாம். பின்னர் வெளியில் காரின் மேல் பகுதியில் வைத்திருந்த பைகளை எடுத்துச்செல்வதற்காக வெளியில் வந்துள்ளனர்.

அதில், துணிகள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் இருந்த சூட்கேஸ் மாயமாகியிருந்தது. இது தொடர்பாக சுந்தப்பா சீகால்மணி விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து காரிலிருந்த சூட்கேஸ் உடன் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.