பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தினால் பேருந்துகள் இயங்கவில்லை: பொதுமக்கள் அவதி

தமிழகம் முழுவதும் நெல்லை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மண்டல போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்த

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:47 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தினால் பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் பொதுமக்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் நெல்லை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மண்டல போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், விருதுநகர் மண்டலத்திலும் 11 தொழிற்சங்களைச் சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஆகியோர் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது பல்வேறு 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 29-ம் தேதி முதல் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பினர் அறித்திருந்தனர். இந்நிலையில் ஒரு நாள் முன்னதாகவே ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இப்போராட்டத்தினா விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பெரும்பாலன பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் இம்மாவட்டத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் பேருந்து இல்லாமல் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் அண்ணா தொழிற்சங்கத்தினர் போரட்டத்தில் கலந்து கொள்ளாததால் சில பேருந்துகள் மட்டும் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இதனால், விருதுநகரை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆட்டோக்கள் மற்றும் கிடைத்த வாகனங்களில் ஏறி பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்குச் சென்று சேர்ந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.