/

நித்திரவிளை அருகே 800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

நித்திரவிளை அருகே கேரளத்துக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 800 லிட்டர் மண்ணெண்ணெய்யை...

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:42 am

சி. சுரேஷ்குமார்

நித்திரவிளை அருகே கேரளத்துக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 800 லிட்டர் மண்ணெண்ணெய்யை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியர் கண்ணன், துணை வட்டாட்சியர் வினைதீர்த்தான், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஊழியர் ஜான்பிரைட் ஆகியோர் நித்திரவிளை அருகே கிராத்தூர் சாலையில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த தமிழ்நாடு பதிவு எண் கொண்ட பயணிகள் ஆட்டோவை நிறுத்தினர். அதன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினார்.

இதையடுத்து ஆட்டோவை அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் பிளாஸ்டிக் கேன்களில் மொத்தம் 800 லிட்டர் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவை மீனவர்களின் விசைப்படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் என்பதும் தெரிந்தது. ஆட்டோவுடன் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்த அதிகாரிகள் விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து, மண்ணெண்ணெயை மார்த்தாண்டம் அருகிலுள்ள மண்ணெண்ணெயை விநியோக மையத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.