மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கரூரில் போலீஸ் ஏட்டுக்கு கத்திக்குத்து: பெயிண்டர் கைது

கரூர் வடிவேல் நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பத்மசீலன்(44). இவர் கரூர் பசுபதிபாளையம் காவல்நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு மாவட்ட

Updated On :11 ஆகஸ்ட் 2014, 11:21 am

கரூரில் போலீஸ் ஏட்டுவை கத்தியால் குத்திய பெயிண்டரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கரூர் வடிவேல் நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பத்மசீலன்(44). இவர் கரூர் பசுபதிபாளையம் காவல்நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற காவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, காவல்நிலைய பணிக்காக பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கரூர்-திண்டுக்கல் சாலையில் உள்ள காளியப்பனூரில் தனியார் இருசக்கர வாகன டீலர் நிறுவனம் முன் ஒருவர் படுத்திருந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் பத்மசீலன் விசாரித்தார். அப்போது குடிபோதையில் இருந்த அந்த நபர் ஏட்டுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென தான் வைத்திருந்த கத்தியால் ஏட்டு வயிற்றில் குத்தினார். இதில் அலறி துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், ஏட்டுவை கத்தியால் குத்திய திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த சவேரியார்பட்டியைச் சேர்ந்த தெய்வேந்திரன்(46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.