விருதுநகர் அருகே வெவ்வேறு விபத்துக்களில் 3 பேர் சாவு
விருதுநகர் அருகே சுந்தரலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் சூரைய்யா(32).இவர் சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் உள்ள தனது தங்கையின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பைக்கில்


விருதுநகர் அருகே வெவ்வேறு விபத்துக்களில் இளைஞர்கள் 3 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
விருதுநகர் அருகே சுந்தரலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் சூரைய்யா(32).இவர் சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் உள்ள தனது தங்கையின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பைக்கில் சென்றாராம். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு திரும்பி வந்து கொண்டிருந்தாராம். அப்போது, அஜாக்கிரதையாகவும்,வேகமாகவும் இருசக்கர வாகனத்தை ஓட்டி துளுக்கப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள அர்ச்சனா ஆற்றுப் பால தடுப்புச் சுவரில் மோதியுள்ளார். அதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம். இது தொடர்பாக அவரது தங்கையின் கணவர் கணேசமூர்த்தி வச்சக்காரப்பட்டி காவல் நிலையில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு:
விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டியைச் சேர்ந்தவர் முனியப்பன்(26). இவர் கட்டட வேலைகளுக்கு கம்பி கட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பாண்டியன் நகர் அடுத்த முத்தால் நகரில் உள்ள தனியார் வீட்டில் திங்கள்கிழமை கட்டட வேலை நடந்துள்ளது. அதில், சென்ட்ரிங் அடைப்பதற்காக கம்பிகளை மேலே எடுத்துச் சென்றாராம். அப்போது, இரும்பு கம்பி மின்கம்பத்தின் வயர் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நின்றிருந்த கார் மீது லாரி மோதியதில் இளைஞர் சாவு:
ஈரோடு மாவட்டம், பங்களாப்புதூர் அருகே துரையம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(22). இவர் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கோபியில் உள்ள தனியார் பாத்திரக்கடையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு நண்பர்கள் குற்றாலத்திற்கு சுற்றுலாச் சென்றனர். அங்கு ப்குளித்து விட்டு திங்கள்கிழமை அதிகாலையில் திரும்பியுள்ளனர். விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது கார் பழுதானது. அதில், ஓட்டுநர் மற்றும் நண்பர்கள் ஆகியோர் மெக்கானிக்கை அழைப்பதற்காக ஊருக்குள் சென்றார்களாம். இதில்,திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அருகே ஈச்சம்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் மட்டும் காரின் பின்சீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.
அப்போது, சாத்தூரில் இருந்து விருதுநகர் நோக்கி வந்த லாரி காரின் பின்புறமாக மோதியதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் உயிரிழந்தாராம். இது தொடர்பாக துரையம்பாளையத்தைச் சேர்ந்த நண்பர் ராஜேந்திரன் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் விருதுநகர் அருகே துளுக்கப்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் பரமசிவம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...