எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வரும் ஞாயிற்றுகிழமை (13-ம் தேதி) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மதுபான விதி 12-ன் படி வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகாவீர் ஜெயந்தி என்பதால்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:58 am

பெ. விஜயபாஸ்கர்

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மதுபான விதி 12-ன் படி வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகாவீர் ஜெயந்தி என்பதால் அன்று எல்லா டாஸ்மாக் மதுக்கடைகளும், மதுபானம் அருந்தும் இடங்களும் மேற்படி தினத்தில் மூடப்பட்டிருக்க வேண்டும்.

 எனவே டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் 13ஆம் தேதி அன்று எல்லா மதுக்கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதை மீறி எவரேனும் கடையை திறந்து வைத்திருந்தாலோ, மதுபானங்களை விற்றாலோ டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர், பார் உரிமையாளர், ஹோட்டல் பார் உரிமையாளர்கள் என சம்பந்தப்பட்டவர்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.