கரூர் மக்களவைத் தொகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்பாடுபடுவேன் என்றார் சுயேட்சை வேட்பாளர் ச.கெளரிமணி.
கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜ கூட்டணியின் தேமுதிக ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளரைத் தவிர சுயேட்சை வேட்பாளர்கள் 18 பேர் போட்டியிடுகின்றனர். இவற்றில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ச.கெளரிமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், எனக்கு 22 ஊழல் எதிர்ப்பு இயக்கங்களின் ஆதரவு இருக்கு. கரூர் மக்களவைத்தொகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்பாடுபடுவேன். அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலக்காதவாறும், காவல்துறையினரின் உதவியோடு வீடுகளில் திருட்டுப்போவதையும் தடுப்பேன். கரூர் பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சுரங்கப்பாதை அமைத்து தருவேன். மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன். எம்பி நிதி ரூ.5 கோடியை தொகுதி மேம்பாட்டுக்கு செலவிடுவேன். யார் ஒருவர் என்னை லஞ்சம் வாங்கினேன் என நிரூபித்தால், எனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

