எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மீண்டும் வேலை வழங்கக் கோரி நடைபயணம்: மக்கள் நலப் பணியாளர்கள் முடிவு

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி கடலூர் மாவட்டம், ராமநத்தத்தில் இருந்து கண்டரக்கோட்டை வரை அக்டோபர் 28-ம் தேதி முதல் 3 நாட்கள் பிச்சை கேட்டு நடைபயணம் செல்லும்

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:01 pm

பெ. விஜயபாஸ்கர்

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி கடலூர் மாவட்டம், ராமநத்தத்தில் இருந்து கண்டரக்கோட்டை வரை அக்டோபர் 28-ம் தேதி முதல் 3 நாட்கள் பிச்சை கேட்டு நடைபயணம் செல்லும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு மக்கள்நலப் பணியாளர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூரில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்துக்கு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சி. வேல்முருகன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேல், ஜோதி,  மங்களூர் ஒன்றியத் தலைவர் செல்வராஜ், மகளிர் அணி செயலர் கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் எஸ். முத்துதமிழரசன், பண்ருட்டி வட்டத் தலைவர் அரிகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் காசிநாதன் பேசினர்.

வேலை இல்லாமல் கடந்த 2 ஆண்டுகளாக வறுமையில் வாடி வரும் மக்கள்நலப் பணியாளர்களுக்கு தமிழக அரசு மீண்டும் வேலை வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் வேலை பிச்சை கேட்டு நடைபயணம் செய்யும் போராட்டத்தை கடலூர் மாவட்டத்தில் அக்டோபர் மாதம் 28-ந் தேதி ராமநத்தத்தில் தொடங்கி 3 நாட்கள் நடத்த வேண்டும்.இதன்படி, ராமநத்தம், விருத்தாசலம், முதணை, முத்தாண்டிகுப்பம், மருங்கூர், காடாம்புலியூர் வழியாக பண்ருட்டி கண்டரக்கோட்டையை சென்றடையும் வகையில் 3 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.