கெடிலம் ஆற்றில் சேற்றில் சிக்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
கடலூர், திருவந்திபுரம் அருகே பில்லாலிதொட்டியை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகன் விஜய்(17). திருவந்திபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த ஆளவந்தான் மகன் ராமகிருஷ்ணன்(13). தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இருவரும் கெடிலம் ஆற்றில் திருவந்திபுரம் தடுப்பணையில் சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் குளித்துக் கொண்டிருந்தனர். தடுப்பணையின் மேல் இருந்து தண்ணீரில் குதித்து விளையாடிக் கொண்டிருந்த 2 பேரும் திடீரென சேற்றில் சிக்கி மேல வர முடியாமல் தண்ணீருக்குள் மூழ்கினர்.
உடனடியாக அப்பகுதி மக்கள் ஆற்றில் குதித்து, இருவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் சேற்றில் சிக்கிக்கொண்ட 2 பேரும் மூச்சுத்திணறி இறந்தனர். சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு 2 பேரின் உடலையும் அப்பகுதி மக்கள் மீட்டனர்.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

