/

தந்தை சுடுதண்ணீர் வீசியதில் காயமடைந்த மகன் சாவு

உசிலம்பட்டி அருகே உள்ள கருத்திவீரன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (72). இவரது மகன் கணேசன் (22). கடந்த 6 மாதங்களாக மனநலம் பாதித்திருந்ததாகக் கூறப்படுகிறது. அடிக்கடி அப்பகுதி தோட்டத்து

News image
Updated On :3 ஜனவரி 2024, 5:56 pm

ஜெயப்பாண்டி

தந்தை சுடுதண்ணீரை வீசியதில் காயமடைந்த மனநலம்பாதித்த மகன் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

உசிலம்பட்டி அருகே உள்ள கருத்திவீரன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (72). இவரது மகன் கணேசன் (22). கடந்த 6 மாதங்களாக மனநலம் பாதித்திருந்ததாகக் கூறப்படுகிறது. அடிக்கடி அப்பகுதி தோட்டத்து மின்மோட்டார்களைச் சேதப்படுத்தியும், கல்வீசியும் வந்த கணேசனின் தொந்தரவால் அதிருப்தியடைந்த சுப்பிரமணி, கடந்த 21-ம் தேதி அவர் மீது சுடுதண்ணீரை ஊற்றி வெறுப்பைக்காட்டியுள்ளார்.சுடுதண்ணீர் பட்டதில் காயமடைந்த கணேசன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக சுப்பிரமணி மீது உசிலம்பட்டி போலீஸார் கொலை முயற்சி வழக்குப்பதிந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார். இதையடுத்து சுப்பிரமணியை போலீஸார் கைது செய்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது குடும்பத்தார் உரிய சிகிச்சை அளிக்கவேண்டும். இல்லாவிடில் அருகேயுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால், சம்பந்தப்பட்டவரை மீட்டு மனநலக் காப்பகத்தில் சேர்ப்பர். ஆகவே மனநலம் பாதிக்கப்பட்டோரை துன்புறுத்தல், தண்டித்தலில் குடும்பத்தார் ஈடுபடக்கூடாது என காவல் கண்காணிப்பாளர வே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கையும் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.