/

மதுரையில் அதிமுக வட்டப் பிரதிநிதி வெட்டிக் கொலை

மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்தவர் மயில்முருகன்(40). அ.தி.மு.க. 72-வது வட்ட மேலமைப்பு பிரதிநிதியாகவும், ஜனதா கூட்டுறவு சங்க இயக்குனராகவும் இருந்தார். அவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து முனிச்சாலையில் உள்ள

News image
Updated On :3 ஜனவரி 2024, 5:55 pm

ஜெயப்பாண்டி

மதுரையில் அதிமுக வட்டப் பிரதிநிதி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்தவர் மயில்முருகன்(40). அ.தி.மு.க. 72-வது வட்ட மேலமைப்பு பிரதிநிதியாகவும், ஜனதா கூட்டுறவு சங்க இயக்குனராகவும் இருந்தார். அவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து முனிச்சாலையில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றபோது, ஆட்டோவில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டியது. சம்பவ இடத்தியேலே ரத்த வெள்ளத்தில் மயில்முருகன் உயிரிழந்தார். இச் சம்பவம் முனிச்சாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்த காவல்துறை துணை ஆணையர் சமந்த் ரோகன் ராஜேந்திரா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் மதுரை கீழமாரட்டு வீதியில் தி.மு.க. பிரமுகர் குருசாமியின் உறவினர் கஜேந்திரபாண்டி கொல்லப்பட்டார். இதில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் 3 பேர் சரணடைந்தனர். அவர்களில் கார்த்திக் என்பவர் இன்று கொலை செய்யப்பட்ட மயில்முருகனின் சகோதரி மகன் என்பதால், இந்தக் கொலை முன்விரோதத்தில்  நிகழ்ந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட மயில் முருகனுக்கு மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.