எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கடலூர் நகர மக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்: அரசு மருத்துவமனையில் தினமும் 70 பேருக்கு சிகிச்சை

கடலூர் நகரில் சமீப காலமாக தெருநாய் கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:37 pm

VASUDEVAN.K

கடலூர் நகரில் சமீப காலமாக தெருநாய் கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்பட்டுத்த நகராட்சி நிர்வாகத்தின் உறுதியான நடவடிக்கையை கடலூர் நகர மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 

 சமீப காலமாக கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தெரு நாய்கள் கடித்ததால் ஊசி போடுவதற்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் குறைந்தது 50 முதல் 70 பேர் வரை தெருநாய் கடி பாதிப்புக்கான ஊசி போட வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 2007ல் 10,218 பேர் நாய் கடி சிகிச்சை பெற்றுள்ளனர். 2008-ல் 8,465 பேரும்,  2009-ல் 10,872 பேரும்,  2010-ல் 7,945 பேரும், கடந்த 2011-ல் 10,563 பேரும், 2012-ல் 9,123 பேரும்,  இந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரை 6,327 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் ஆண்டுதோறும் சராசரியாக 6 முதல் 10 பேர் வரை இறந்துவிடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை நாய்க் கடிக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சுமார் 50,000 பேர் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இறந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் நகரில் 4,500 தெருநாய்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. நாய்கள் எண்ணிக்கை குறித்து கள ஆய்வு மேற்கொள்ள சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய நவீன முறையில் அறுவை சிகிச்சை கூடம் கட்டப்பட்டுள்ளது.  அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு இங்கு அறுவை சிகிச்சை தொடங்கப்படும் என்றார்.  

 இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கடலூர் அரசு தலைமை மருத்துவமனை தவிர விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளிலும் தெருநாய்கடிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 இந்த அரசு மருத்துவமனைகளில் நாய்கடி ஊசி இல்லாதபோது, மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மக்கள் வருகின்றனர். இந்த எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்றார்.

 பிராணிகள் நலச் சங்கத்தினர் (புளூ கிராஸ்) தெரு நாய்களைக் கொல்லக்கூடாது என்பதால், அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை என உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். ஆனால் தெரு நாய் கடிப்பதால் பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழக்கின்றனர்.

  எனவே, நாய்களுக்கு முறையான மருத்துவம் அளித்து, அவற்றால் வெறிநோய் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.