விருதுநகர் பகுதியில் நடைபெற இருந்த 2 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
விருதுநகரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ரஞ்சனி(பெயர் மாற்றம்). இதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மணமகனுக்கும் இன்று காலையில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இது குறித்து அப்பகுதியில்


விருதுநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
விருதுநகரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ரஞ்சனி(பெயர் மாற்றம்). இதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மணமகனுக்கும் இன்று காலையில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் ஆட்சியர் டி.என்.ஹரிஹரனுக்கு சனிக்கிழமை இரவு ரகசிய தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஆகியோருக்கு தடுத்து நிறுத்த உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் அதிகாரிகள் பெண் வீட்டாரைச் சேர்ந்தவர்களை நிச்சயம் செய்யும் நேரத்தில் சந்தித்தனர். இதையடுத்து, பெண் வீட்டாரையும், மணமகன் வீட்டாரையும் தனித்தனியாக அழைத்து சமூக நலத்துறை ஆலோசகர் பழனியம்மாள் பேசினார். எனவே மணமகனுக்கு 21 வயதும், மணப்பெண்ணுக்கு 18 வயதும் முடிந்திருக்க வேண்டும். இந்நிலையில் குறிப்பிட்ட வயதை அடையாமல் திருமணம் செய்து வைப்பது தவறான நடவடிக்கையாகும் என்றனர். அதற்கு பெண் வீட்டார் நிச்சயம் செய்வதற்கு உறவினர்கள் அனைவரும் வந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான விருந்து உள்ளிட்டவைகளும் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். நிலைமையை எடுத்துரைத்து இருவீட்டாரிடமும் எழுதி வாங்கிக் கொண்டனர்.
இதேபோல், சிவகாசி அருகே ஆணையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(25). இவர் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த தனது அக்கா மகள் 16 வயது சிறுமியான ராஜேஸ்வரி்க்கும்(பெயர் மாற்றம்) திருமணம் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெறுவதாக இருந்தது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை இரவு விரைந்து சென்றனர். அங்கு திருமணத்திற்கு நிச்சயம் செய்து கொண்டிருந்தனர். உடனே இருவீட்டாரைச் சேர்ந்த உறவினர்களையும் அழைத்து பேசினார்கள். குறிப்பிட்ட வயதுக்கு பின்னரே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி எழுதி வாங்கினார்கள். இதையும் மீறி திருமணத்தை நடத்தினால் இருவீட்டார் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், முருகேசன் என்பவருக்கு, அக்கா மகள் என்பதால் வயதை மறைத்து திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரியிடம் இத்திருமணங்கள் குறித்து கூடுதல் தகவல் கேட்ட போது பதில் கூற மறுத்துவிட்டார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...