/

விருதுநகர் அருகே வாகன விபத்தில் கல்லூரி மாணவர் சாவு

விருதுநகர் அருகே அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவரது மகன் நவீன் பூபதிபாண்டியன்(18), கோவில்பட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த இவரது நண்பர் முருகேசன்(19). இவர்கள் இருவரும்

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:33 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே இரு சக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயம் அடைந்தார். 

விருதுநகர் அருகே அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவரது மகன் நவீன் பூபதிபாண்டியன்(18), கோவில்பட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த இவரது நண்பர் முருகேசன்(19). இவர்கள் இருவரும் ஆனைக்குட்டத்தில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வருகின்றனர். இவர்கள் படிக்கும் கல்லூரியிலிருந்து சுற்றுலாச் செல்கின்றனர். அதற்காக, வியாழக்கிழமை இரவு விருதுநகரில் புறப்பட்டுச் கல்லூரிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, குருமூர்த்திநாயக்கன்பட்டி தனியார் அலுமினியம் தொழிற்சாலை அருகே செல்லும் போது சிவகாசியில் இருந்து தண்ணீர் ஏற்றி வந்த வேன் பைக் மீது மோதியது.

இதில், சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் அடைந்து நவீன் பூபதிபாண்டியன் உயிரிழந்தார். உடன் சென்ற முருகேசன் படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவலறிந்த ஆமத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மஞ்சுநாதன் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வலையங்குளத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் பாண்டியன்(29) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.