தமிழகத்தில் காங்கிரஸ் எந்தக் கட்சியோடும் கூட்டணி வைத்தாலும் மக்களவைத் தேர்தலில் ஜெயிக்க முடியாது என மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
விருதுநகரை அடுத்த சூலக்கரை தனியார் நூற்பாலை அருகே மதிமுக சார்பில் வருகிற 15-ம் தேதி அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு நடத்தப்பட இருக்கிறது. இதற்கான பந்தல் உள் அரங்கம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்த மாநாட்டிற்கான பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. இம்மாநாடு மூலம் மதிமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. அதோடு, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதில் பேசும் முக்கிய பிரமுகர்கள் மக்களவைத் தேர்தலில் மதிமுகவின் நிலை இருக்கும் என்பது குறித்து பேசவுள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கையால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் கரன்சி சுனாமி ஏற்பட்டது, அதேபோல் இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது. இனிமேல் சாக்குப்பையில் கரன்சிகளை கட்டிக் கொண்டுதான் பொருள்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பன்னாட்டு கம்பெனிகளின் காலனி பூமியாகவும் ஆக்கியுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் காங்கிரஸ் அரசையும் தூக்கியெறியவும் மக்கள் தயராகி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தமிழகத்தில் யாரோடும் கூட்டணி வைத்தாலும் மக்களவைத் தேர்தலில் ஜெயிக்க முடியாது. அந்தளவிற்கு பொதுமக்களின் எதிர்ப்புகளை பெற்றுள்ளனர். இந்நிலையில் நடுநிலையாளர்களின் கவனம் அனைத்தும் மதிமுக பக்கம் திரும்புகிறது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை விட, இலங்கையில் நடத்தவே கூடாது. இதை வலியுறுத்தி சென்னையில் 7-ம் தேதி மாணவர்கள் பெருமன்றம் சார்பில் மாநாடு நடைபெற இருக்கிறது. அதோடு, பொதுமக்கள் மத்தியில் வழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் தொடங்கி, சென்னை வரையில் வருகிற 13-ம் தேதி மாணவர்கள் மன்றத்தினர் சார்பில் பிராச்சார பயணம் மேற்கொள்ளப்பட உள்ளனர்.
இலங்கையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐ.ந.சபையின் உறுப்பினர் நவநீதம்பிள்ளை சென்றார். அப்போது அங்குள்ள அமைச்சர் மெர்வின் செல்வா ஏற்கனவே மணமாகிவிட்டதாகவும், மறுபடியும 2-வதாக உங்களை திருமணம் செய்து கொண்டு இலங்கையை சுற்றி காட்டுவதாக முறைகேடாக பேசியுள்ளார். இதிலிருந்தே அங்குள்ள தமிழ்ப்பெண்களின் நிலைமையை அறிந்து கொள்ள முடியும். அதனால், ஏற்கனவே ஜெனிவா மாநாட்டில் இது குறித்து விரிவாக நவநீதம்பிள்ளை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார். அப்போது, இச்சம்பவம் குறித்து குறிப்பிட்டு பேசுவாரா என்பதை பொறுத்தே எதுவும் கூறமுடியும்.
ஏற்கனவே கச்சத்தீவு இந்தியர்களுக்கு கொஞ்சம் கூட உரிமை கிடையாது என அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கை மன்மோகன்சிங் தயார் செய்தது போல் தெரியவில்லை. இதை ராஜபட்ச அறிக்கையை தயார் செய்து, அவரே தாக்கல் செய்தது போல் இருப்பதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
அப்போது உடன் மாவட்ட செயலாளர் ஆர்.சண்முகசுந்தரம், முன்னாள் மக்களவை உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் வரதராஜன், ஞானதாஸ் உள்ளிட்டோர் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

