உலகளவிலான அத்லெடிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும் நிதி வசதியில்லாமல் மாற்றுத்திறனாளிகள் உதவி எதிர்பார்த்து உள்ளனர்.
உலகளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான அத்லெடிக் போட்டி நெதர்லாந்தில் வருகிற 14-ம் தொடங்கி, தொடர்ந்து 22-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்கு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சின்னச்சாமி மகனும், மாற்றுத்திறனாளி வீரர் பொற்செழியன்(28). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த முத்தாண்டி என்பவரின் மகளும், மாற்றுத்திறனாளி வீராங்கனையுமான அன்னலட்சுமி(25) ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதில், பொற்செழியன் சென்னையில் மாநில அளவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வாள்வீச்சு போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அதேபோல், புதுதில்லியில் நடந்த தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெண்கலம் பதக்கமும் பெற்றுள்ளார். அதையடுத்து, மலேசியா, லண்டன் ஆகிய இடங்களில் நடந்த உலகளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும் கடவுச் சீட்டு குறிப்பிட்ட நேரத்தில் வாங்க முடியாத காரணத்தாலும், நிதி வசதி இல்லாத காரணத்தாலும் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருந்துள்ளார்.
அதேபோல், அன்னலட்சுமி மாற்றுத்திறனாளிக்கான போட்டியில் குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகளில் முதல் இடங்களை பெற்றுள்ளார். அதில், தேசிய அளவி்ல புதுதில்லியில் நடந்த வட்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கமும், பெங்களூருவில் நடந்த தென்மாநில அளவிலான நடந்த போட்டியில் வட்டு எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், மாநில அளவில் சென்னையில் நடந்த போட்டியில் குண்டு எறிதல் போட்டியில் தங்கமும், வட்டு எறிதலில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார். மலேசியாவில் நடந்த ஈட்டி எறிதலில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார். மேலும், லண்டன் உள்ளிட்ட இடங்களில் வாய்ப்பு கிடைத்தும் நிதி வசதியில்லாமல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலையேற்பட்டது.
தற்போது, நெதர்லாந்தில் பங்கேற்க செல்வதற்கு தலா ரூ.1.50 லட்சம் தேவைப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பொற்செழியனுக்கு ரூ.1.50 லட்சம் நிதி உதவியை பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வைகைச்செல்வன் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், போட்டியில் பங்கேற்பதற்கு நிதி உதவியின்றி தவிக்கும் அழகாபுரி வீராங்கனை அன்னலட்சுமிக்கும் நிதி உதவி செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

