/

விருதுநகரில் இளைஞர் படை ஆள்சேர்ப்புக்கான விண்ணப்ப விநியோகம்

விருதுநகர் மாவட்டத்திலிருந்து இப்படைக்கு 320 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் இன்று தொடங்கி, தொடர்ந்து இம்மாத இறுதி வரையில் வழங்கப்பட இருக்கிறது. முதல்

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:28 pm

எஸ். பாண்டியன்

தமிழ்நாடு காவல் இளைஞர் படை ஆள்சேர்ப்புக்கான விண்ணப்ப விநியோகத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் இன்று தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டத்திலிருந்து இப்படைக்கு 320 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் இன்று தொடங்கி, தொடர்ந்து இம்மாத இறுதி வரையில் வழங்கப்பட இருக்கிறது. முதல் நாள் காவல் இளைஞர் படையில் சேருவதற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் ஆர்வத்துடன் விண்ணப்ப விநியோக மையத்தில் குவிந்தனர். பின்னர் அலுவலகத்தில் தேர்வுக் கட்டணம் நேரில் செலுத்திய இளைஞர்களுக்கு விண்ணப்ப விநியோகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தொடங்கி வைத்தார். இதில், காலை முதல் பிற்பகல் வரையில் 350 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக, காலை 8 மணியில் இருந்தே இளைஞர் படையில் சேர்வதற்கான விண்ணப்பங்களை பெற்றுச் செல்வதற்காக வந்திருந்தனர். மேலும், நேரில் வரமுடியாதவர்கள் www.tnpolice.gov.in என்ற இணைய தளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தேர்வுக் கட்டணம் ரூ.100 வரைவோலையுடன் விண்ணப்பங்களில் சான்றொப்பம் பெற்று குறிப்பிட்ட நாள்களுக்குள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சலிலோ அனுப்பி வைக்கலாம். எனவே இம்மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் கலந்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.