விருதுநகர் அருகே போலி ஆவணம் தயாரித்து 2.43 ஏக்கர் நிலம் மோசடி
விருதுநகர் அருகே போலி ஆவணம் தயாரித்து 2.43 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த சகோதரர், சகோதரரி உள்ளிட்ட 18 பேர் மீது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து


விருதுநகர் அருகே போலி ஆவணம் தயாரித்து 2.43 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த சகோதரர், சகோதரரி உள்ளிட்ட 18 பேர் மீது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே குல்லூர்சந்தையைச் சேர்ந்தவர் கேசவன்(50). இவருக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் சொந்தமாக 4.33 ஏக்கர் இடம் உள்ளது. அதில், இவருக்கு சொந்தமாக 2.33 ஏக்கர் இடம் இருந்துள்ளது. இவர் வியாபார விசயமாக அடிக்கடி வெளியூர் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்ததால் நிலத்தை கவனிக்காமல் இருந்தார். இந்நிலையில் நிலத்தை விற்பனை செய்வதற்காக ஆவணங்கள் வாங்குவதற்காக வருவாய் துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் பத்திர பதிவு அலுவலகத்தில் வில்லங்கம் போட்டு பார்த்துள்ளார். அதில், தன்னுடைய நிலம் பலருக்கு கைமாறி உள்ளது தெரியவந்தது.
இக்குறிப்பிட்ட இடத்திற்கு இவரது சகோதரர் பாஸ்கரன், சகோதரி ராமலட்சுமி ஆகியோர் போலியான ஆவணம் தயாரித்து பாலவநத்தம் ராமலிங்கத்துக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளனர். அதற்கு சாட்சியாக வீரபத்திரன், ஆதித்யன் ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர். அதையடுத்து, இவரிடம் இருந்து முத்துராமன்பட்டியைச் சேர்ந்த அமிர்தராஜ் என்பவருக்கு கிரையம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், விருதுநகர் ஜான்கென்னடி, சென்னையைச் சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் குல்லூர்சந்தையைச் சேர்ந்த ராஜா உள்ளிட்ட பலருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளது தெரியவந்தது.
உடனே இது தொடர்பாக விருதுநகர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸாரிடம் கேசவன் புகார் செய்தார். அதன் பேரில் நிலத்தை போலியான ஆவணம் தயாரித்து விற்ற சகோதரர், சகோதரரி, நிலம் வாங்கியவர்கள், பத்திர எழுத்தாளர் தேவிபாலா, சார்பு-ஆய்வாளர் சுப்புராமன் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...