சிவகாசி நகர், திருத்தங்கல் நகர் பகுதிகளில் இருந்து வரும் சிலைகள் தெய்வாணை நகரில் பயன்படுத்தப்படாத கிணற்றிலும், பூளாவூரணி கிராமத்திலிருந்து வரும் சிலைகள் சேர்மன் கிணற்றிலும், துரைச்சாமிபுரத்தில் விநாயகர் கோவில் கிணற்றிலும், காக்கிவாடன்பட்டியில் ஊரணி கிணற்றிலும், புளிப்பாறைப்பட்டியில் பொதுக்கிணற்றிலும்,அதேபோல், தைலாக்குளம், நக்கமங்களம், மானகசேரி, வேண்டுராயபுரம், வன்னியம்பட்டி, வைத்தியலிங்காபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து வரும் சிலைகள் அந்தந்த கிராம கண்மாய்களிலும், மகராஜபுரம் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள ஊரணியிலும், வத்திராயிருப்பில் விநாயகர் கோயில் கண்மாயிலும், கான்சாபுரத்தில் மண்டப ஊரணியிலும், ராமசாமியாபுரத்தி்ல் சமுத்திரக்கண்மாயிலும், திருச்சுழி பகுதியில் குலசேகரன்நல்லூரில் செல்லாங்குளம் கண்மாயிலும், கட்டனூரில் அம்மன்கோவில் தெருக் குளத்திலும் என குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் விழாக்குழுவினரை கேட்டுக் கொண்டுள்ளார்.