பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி செய்தவர் மீது வழக்கு பதிவு
விருதுநகரில் கொடுக்கல் வாங்கல் தகராறில் திருமணமான பெண்ணின் சேலையை பிடித்து மானபங்கப்படுத்த முயற்சித்தவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


விருதுநகரில் கொடுக்கல் வாங்கல் தகராறில் திருமணமான பெண்ணின் சேலையை பிடித்து மானபங்கப்படுத்த முயற்சித்தவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரனின் மனைவி தனலட்சுமி(43). இவரது கணவர் இதே ஊரில் மெயின் பஜாரை சேர்ந்த வன்னியராஜன்(40) என்பவரிடம் குறிப்பிட்ட தொகை கடனாக பெற்றிருந்தாராம். இத்தொகையை பல்வேறு தடவை வன்னியராஜன் கேட்டாராம். ஆனால், பணத்தை திருப்பித் தராமல் தாமதம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்கிழமை அருகில் உள்ள திருக்கோயிலுக்கு வழிபாடு நடத்துவதற்காக கணவருடன் மனைவி தனலட்சுமி சென்றார்.
அப்போது, பஜாரில் வழிமறித்து தனலட்சுமியின் சேலையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்த முயற்சி செய்ததோடு, பணத்தை திருப்பித் தராவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம். எனவே இது தொடர்பாக தனலட்சுமி விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வன்னியராஜன் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...